10th plus two supplementary exam online registration tamilnadu
10th plus two supplementary exam online registration tamilnadu: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
துணைத் தேர்வுகளுக்கான தேர்வு:
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வுகளுக்கான தேதி ஜூலை 25 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10th plus two supplementary exam online registration tamilnadu – 10th, plus two துணை தேர்வுக்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
மே 2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022
ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.0௦ மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூலை / ஆகஸ்ட் 2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மே 2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (11 ௦8) தோல்வியுற்ற பாடங்களுடன் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 27.06.2022 (திங்கட்கிழமை) முதல் 04.07.2022 (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (03.07.2022) ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
Exam Fees
10th Exam Fees
Exam Fees | Rs. 125 |
Online Registration Fees | Rs. 50 |
Total | Rs .175 |
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:-
தேர்வுக் கட்டணம் ரூ.125/- மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50/- சேர்த்து மொத்தம் ரூ. 175/-ஐ ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள் / சேவை மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுக் கட்டணம்
ஏற்கனவே மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வெழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுதும் தேர்வர்கள் |
ஓவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் கட்டணம் இதரக் கட்டணமாக ரூ35 செலுத்த வேண்டும்.
ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- |
மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வினை முதன் முறையாக எழுதவுள்ள தேர்வர்கள் | தேர்வுக் கட்டணம் ரூ.150/-
இதரக் கட்டணம் ரூ.35/- மொத்தம் ரூ.185/- ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- |