நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில்.
விஜயின் மற்றொரு முக்கிய திட்டம் குறித்து தகவல்களும் கசிந்துள்ளது
தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய்.
இவர் சமீப காலமாக அரசியலில் தனது நிலைப்பாட்டை நிறுத்தி வருகிறார் ஏனென்றால் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகுவதற்கு பல்வேறு அரசியல் சார்ந்த முட்டுக்கட்டைகள் இருக்கிறது.
இதனால் விஜய் ஒவ்வொரு படத்தையும் திரையிடுவதற்கு கடுமையான முயற்சிகளையும் சில நேரங்களில் நீதிமன்றத்தையும் நாட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விஜய் திரைப்படங்களை திரையிடுவதற்கு ஒவ்வொரு முறையும் புது முயற்சிகளை எடுத்து வருகிறார்.
காமராஜர் பிறந்த நாளில் தமிழக முழுவதும் இந்த இரவு பாடசாலை திட்டத்தை விரிவு படுத்த நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.
உடனடியா விஜய் தமிழக முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் மக்களின் என்ன ஓட்டத்தை அறிந்து கொண்டு பின்னர் அரசியல் ஈடுபடுவது குறித்து.
அறிவிப்பை வெளியிட விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் முக்கிய காரணம்
திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழ் திரையுலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
குறிப்பாக எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியிடுவதற்கு திமுக குடும்பம் சார்ந்த நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படங்களை வாங்கி விடுகிறார்கள்.
சமீப காலமாக நடிகர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலினுக்கும் கருத்து வேறுபாடு மறைமுகமாக இருந்து வருகிறது.
இந்த மறைமுக பனிப்போர் என்பது இனிவரும் காலங்களில் நேரடியாக அரசியலில் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
திரைப்படத்தில் மட்டும் தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருந்த விஜய் பல்வேறு சிக்கலுக்கு உள்ளாக்கி அவரை கோபப்படுத்தியதன் காரணமாக நடிகர் விஜய் இப்பொழுது நேரடியாக அரசியலுக்கு வருகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியாளர்கள் களத்தில் இருப்பார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
அண்ணாமலை,சீமான்,எடப்பாடி கே பழனிசாமி, இவர்கள் பட்டியலில் தற்போது விஜய் இணைந்துள்ளார்.
ஏனென்றால் இவர்கள் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள் நிச்சயமாக அடுத்த ஆண்டு தமிழக வரலாற்றில் அரசியலில் மிகப்பெரிய தாக்கம் இருப்பதில் எந்த மாற்றமும் இல்லை.
நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து இப்பொழுது மறைமுகமாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதற்கு விஜய் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை நேர்மாறாக நடிகர் விஜய் இப்பொழுது சமீப காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து வருகிறார்.
தமிழக முழுவதிலும் உள்ள 234 தொகுதிகள் குறித்து கள நிலவரங்களை நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.