Effects of using GBWhatsApp
Effects of using GBWhatsApp: WhatsApp போலவே உருவாக்கப்பட்டிருக்கும் GB WhatsApp, WhatsApp+ என்ற செயலியால் பயனர்களின் விவரங்கள் திருடுபோவதாக ESET இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரபல இணைய பாதுகாப்பு நிறுவனம் ESET ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் இணைய குற்றங்கள், போலி செயலிகள், வைரஸ் தாக்குதல் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிடும். அந்த வகையில், தற்போது T2 2022 அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Effects of using GBWhatsApp அதன்படி, இந்தியாவில் தான் அதிகப்படியான போலி செயலிகள் பயன்பாடு இருப்பதாகவும், ஆண்டரயா்டு மோசடி செயலிகளின் விளையாட்டு மைதானமாக இந்தியா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான ட்ரோஜன் வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்களின் தாக்கம் இந்தாண்டின் பிற்பாதியில் 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மோசடி செயலிகளில் அதிகம் காணப்படுவது GB WhatsApp, WhatsApp+ ஆகும். ஜிபி வாட்ஸ்அப் என்பது வாட்ஸ்அப் போலவே உருவாக்கப்பட்ட, வாட்ஸ்அப்பில் இல்லாத கூடுதல் அம்சங்களைக் கொண்ட செயலியாகும். இது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்காது. எனவே, பயனர்கள் இந்த ஜிபி வாட்ஸ்அப்பை மற்ற தளங்களில் இருந்து APK ரக கோப்பாக பதிவிறக்கம் செய்து, போனில் இன்ஸ்டால் செய்கின்றனர்.
இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் எச்சரிக்கையின்படி, ஜிபி வாட்ஸ்அப் என்பது பயனர்களின் அனுமதியின்றி, பயனர்களுடைய தனிப்பட்ட தரவுகள், கடவுச்சொற்கள், மெசேஜ்கள், ஆடியோ ஆகியவற்றை சேகரித்தை எதிர்முனையில் இருக்கும் மோசடி கும்பல்களுக்கு வழங்கிவிடும்.

Effects of using GBWhatsApp
மோசடி செயலியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
ஜிபி வாட்ஸ்அப்பை, WhatsApp+ இன்ஸ்டால் செய்திருந்தால் அது ஏற்கெனவே உங்கள் ஸ்மார்ட்போன் விவரங்களை திருடும் மென்பொருளை மறைமுகமாக இயங்கச் செய்திருக்கும். எனவே, ஜிபி வாட்ஸ்அப்பை அன்-இன்ஸ்டால் செய்தால் கூட, மறைமுகமாக நிறுவப்பட்ட மென்பொருள், உங்கள் தனிப்பட்ட விவரங்களை திருடிக்கொண்டிருக்கும். இதற்கு ஒரே வழி ஸ்மார்ட்போன் முழுவதுமாக ஃபார்மெட் செய்வது தான். உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா அனைத்தையும் நீக்க வேண்டும். அப்போது தான் மேற்கண்ட வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியம்.
பொதுவாக கூகுள் ப்ளே ஸ்டோரைத் தவிர்த்து வேறு எந்த தளங்களில் இருந்தும், எந்தவிதமான ஆப்களையும் இன்ஸ்டால் செய்யக்கூடாது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் ஆப் ஆக இருந்தால் கூட, அதன் நம்பகத்தன்மை ஆராய்ந்து பிறகே இன்ஸ்டால் செய்ய வேண்டும். மேலும், முடிந்த வரையில் அத்தகைய செயலிகளுக்கு ஸ்மார்ட்போனில் எந்த அனுமதியையும் கொடுக்கக்கூடாது. இவ்வாறு முடிந்த வரையில் ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.