ICAR Perambalur Recruitment 2023
ICAR Perambalur Recruitment 2023
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
பெரம்பலூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்டெனோ, ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் ஸ்டெனோகிராபர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2023 ஆகும்.
STENOGRAPHER
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
DRIVER
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ICAR இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : The Chairman,
CAR – KRISHI VIGYAN KENDRA Hans Roever Campus,
Valikandapuram,
Perambalur – 621115.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2023
Application Link (pdf) – Click here
Notification (pdf) – Click here