Jio 7th anniversary offer in tamil
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கி 7 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக ரீசார்ஜ் பேக்குகளில் சிறப்பு ஆஃபர்களை அறிவித்துள்ளது. (Jio 7th anniversary offer in tamil)
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமான கட்டத்தில் ரிலையன்ஸின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. விலை குறைவான அதிவேக டேட்டா ப்ளான்களை தொடர்ந்து வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனமாக முதல் இடத்தில் உள்ளது.
ஜியோ நிறுவனம் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகிவிட்டதை கொண்டாடும் விதமாக சில ரீசார்ஜ் பேக்குகளில் எக்ஸ்ட்ரா டேட்டாவை ஆஃபராக வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம். அதன்படி ரூ. 299, ரூ.749 மற்றும் ரூ.2999 ஆகிய ரீசார்ஜ் பேக்குகளில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.299,ரூ.799,ரூ.2,999
ரூ.299 பேக்கில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்கள், 100 எஸ்.எம்.எஸ்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் 7 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.749 பேக்கில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்கள், 100 எஸ்.எம்.எஸ்கள் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் 14 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ரூ.2,999 பேக்கில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்கள், 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் 21 ஜிபி கூடுதல் டேட்டா (7×3= 21 GB) வழங்கப்படுகிறது. மேலும் இந்த ரூ.2,999 பேக்கில் AJIO ஷாப்பிங் மீது ரூ.200 சலுகையும், Netmeds ல் வாங்கும் மருந்துகளுக்கு 20% தள்ளுபடியும், Swiggy ஆர்டர்களில் ரூ100 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மெக்டோனல்ட்ஸில் ரூ.149 மற்றும் அதற்கு அதிகமான ஆர்டருக்கு இலவச மெக்டோனால்ட் மீல்ஸ்
ரிலையன்ஸ் டிஜிட்டலில் 10 சதவீதம் கழிவு
யாத்ரா செயலியில் விமான டிக்கெட் புக்கிங்கிற்கு ரூ.1500 வரை ஆஃபரும், விடுதிகள் புக்கிங்கிற்கு 15% வரை ஆஃபரும் வழங்கப்படுகிறது.
இந்த ஆஃபர்கள் மட்டும் எக்ஸ்ட்ரா டேட்டா ப்ளான்கள் மேற்குறிப்பிட்ட ரீசார்ஜ் பேக்குகளில் செப்டம்பர் 5 முதல் 30ம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.