Morning Positive Motivation quotes in tamil
Dear Friends,
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
We have added Morning Positive Motivation Quotes in tamil – One line tamil motivationl quotes for making your morning session as positive and energetic. You can read the Morning motivation quotes in tamil below, Join our WhatsApp group and telegram channel to get regular updates
Join Daily Motivation | |
Click here | |
Telegram | Click here |
ஒருவரிடம் நீங்கள் பெறக்கூடிய மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்று, பணிவில் அவரை வெல்வதே.
தீர்க்க முடியாத சிக்கல்களைப் போன்று அற்புதமாக மாறுவேடமிட்டுள்ள பெரிய வாய்ப்புகளை நாம் தொடர்ந்து எதிர்கொள்கிறோம்.
மனிதர்கள் தங்களது மனநிலையை மாற்றுவதன் மூலமாக தங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்.
நாளைய பொழுதிற்கான சிறந்த தயாரிப்பானது உங்களது சிறந்த செயலை இன்று செய்வதே
தவறவிட்ட வாய்ப்பை விட அதிக மதிப்புடைய விஷயம் வேறு எதுவுமில்லை.
நீங்கள் உங்களது சிறந்த செயலை செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தோல்வி பற்றி கவலைப்பட நேரமில்லை.
நமக்கான எல்லா வாய்ப்புகளும் நம்மைச் சுற்றியே உள்ளன, சில நேரங்களில் அவற்றை நாம் சரியாக அங்கீகரிப்பதில்லை.
நேற்றைய செயல் உங்களுக்கு பெரிதாக தெரிந்தால், இன்று நீங்கள் எதையும் செய்யவில்லை என்று அர்த்தம்.
உங்கள் பிரச்சினைகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்; 80% பேர் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை மற்ற 20% பேர் அதை எண்ணி மகிழ்ச்சி அடைவர்.
இந்த உலகில் எதுவும் சாத்தியமற்றதல்ல என்பதை உங்கள் மனதில் நிறுத்தி நேர்மறையான எண்ணங்களை கொண்டிருந்தால் எல்லாம் சாத்தியமே.
வாழ்க்கையானது, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம், அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே தொண்ணூறு சதவீதம்.
வெற்றியாளர்கள் கடின உழைப்பை வெற்றியாக மாற்றக்கூடியவர்கள், தோல்வியடைந்தவர்களோ அதை தண்டனையாக பார்ப்பவர்கள்.
வெறும் பேச்சினால் நான் ஒருபோதும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை, கேள்விகளை கேட்கும்போது மட்டுமே விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
நேற்று என்பது இன்றைய நினைவு மற்றும் நாளை என்பது இன்றைய கனவு.
நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை முதலில் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்; பின்பு நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.
நமது விருப்பத்தின் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிய கவலைகளை நிறுத்துவதே நமது மகிழ்ச்சிக்கான ஒரே வழி.
வலிமையற்றவர்கள் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றார்கள்; வலிமை வாய்ந்தவர்களோ, காரணம் மற்றும் விளைவை நம்புகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஆண்டின் சிறந்த நாளென்று உங்கள் இதயத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எதையாவது பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றுங்கள், உங்களால் அதை மாற்றமுடியவில்லை என்றால் உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள்.
சிந்தனையால் பயத்தை வெல்ல முடியாது; ஆனால், செயல்பாடு அதனை சரியாகச் செய்கின்றது.
உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.
எப்பொழுது நாம் நமது எண்ணங்களை ஒழுங்காக வழிநடத்துகிறோமோ, அப்பொழுது நம்மால் நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகின்றது.
வெற்றி போலவே தோல்வியிலும் பலருக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது; நேர்மையான மனப்பாங்கின் மூலம் தோல்வியானது கற்றுக்கொள்ளும் அனுபவமாகின்றது.
உங்களின் தனிப்பட்ட சாதனை உங்கள் மனதிலேயே தொடங்குகிறது; உங்களின் பிரச்சினை, குறிக்கோள் மற்றும் ஆசை என்ன என்பதை சரியாக அறிவதே முதல்படி.
நீங்கள் உங்கள் சூழ்நிலையின் ஒரு தயாரிப்பே; இலக்கை நோக்கி உங்களை சிறப்பாக உருவாக்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள்.
முயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்காக பின்பற்றவேண்டிய விதி
வளர்ச்சிக்கான வலிமையான கொள்கை மனிதனின் தேர்விலேயே இருக்கின்றது.
தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைவிட அதிகமான வாய்ப்புகளை புத்திசாலிகள் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
என்னை செயல்படுத்திக் கொண்டே வைத்திருப்பது இலக்குகளே.
இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.
வெறுப்பது எளிதானது, விரும்புவது கடினமானது; அதுபோல, அனைத்து நல்ல விஷயங்களையும் அடைவது கடினமானது, கெட்ட விஷயங்களைப் பெறுவது எளிதானது.
நம்முடைய மிகப்பெரிய பெருமை விழாமல் இருப்பதில் இல்லை, ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதில் இருக்கின்றது.
உங்களுக்கு என்ன தெரியும் மற்றும் என்ன தெரியாது என்பதை அறிந்துகொள்வதே உண்மையான அறிவு.
உயர்ந்த நம்பிக்கைகள் சிறந்த மனிதர்களை உருவாக்குகின்றன.
நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கேட்பதை விட்டுவிட்டு செயல்படுங்கள்; செயல்பாடு ஒன்றே உங்களை வரையறுக்கும்.
ஒரு சிறந்த சிந்தனையின் ஒளியானது, எனக்கு பணத்தைவிட அதிக மதிப்பினை உடையது.
வெற்றிகரமான முதலீடு என்பது அடுத்தவர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று துல்லியமாக எதிர்பார்ப்பதேயாகும்.
இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன.