New sudithar model 2022 நியூ சுடிதார் மாடல் 2022

New sudithar model 2022

நியூ சுடிதார் மாடல்

New sudithar model 2022 : பெண்கள் தங்களது உடல் நிறம் மற்றும் உடல் வாகிற்கு ஏற்றாற் போல் சுடிதார்களை கனக்கச்சிதமாக தைத்து அணியும் பொழுது அவை தன்னம்பிக்கையும், ஆளுமையும் தரும் என்பதை உறுதியாக நம்பலாம். சுரிதாரில் பல பாணிகள் இருந்தாலும் அனார்கலி சுடிதார், ஃபிளேர்டு சுடிதார், ஷார்ட் சுடிதார், லாங் டாப் சுடிதார், பாட்டியாலா சுடிதார், பதானி சுடிதார், ட்ரௌஸர் ஸ்டைல் சுடிதார், பலாஸ்ஸோ சுடிதார் போன்றவற்றை நாம் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.

Latest Government Jobs – Click here

நியூ சுடிதார் மாடல்

எளிதான காட்டன் சுடிதார்

New sudithar model 2022
New sudithar model 2022

பெண்கள் மத்தியில் இவ்வகை காட்டன் சுடிதார்கள் எப்பொழுதுமே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும். பெண்களது சருமப் பொருத்தம் மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்றாற் போல் தைத்து உடுத்தப்படும் எளிதான காட்டன் சுடிதார்கள் அலுவலகம், பண்டிகைகள் மற்றும் தோழிகள் கூட்டத்திற்கு அணிவதற்கு ஏற்ற கண்ணியமான தோற்றத்தைத் தருகின்றது. இவ்வகை காட்டன் சுடிதார்கள் இப்பொழுது மட்டுமல்ல நீண்ட காலமாகவே பெண்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது.

காட்டன் சில்க் சுடிதார்கள்

New sudithar model 2022
New sudithar model 2022

காட்டன் சில்க் துணிகளின் பளபளப்பானது திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு அணிய ஏற்றவையாகும். உடலோடு ஒட்டி சிக்கென தைக்கப்படும் சுடிதார்கள் நம்மை மெலிதாகவும், உயரமாகவும் காட்டும் என்பதில் ஐயமில்லை.

டிசைனர் முழு ஸ்லீவ் சுடிதார்கள்

New sudithar model 2022
New sudithar model 2022

முழுக்கை ரிப்பன் பார்டர் மற்றும் வட்டக்கழுத்து வடிவமைப்புடன் தைத்து போடப்படும் சுடிதார்கள் அணிபவருக்கு ஒரு பணக்காரத் தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.

உயர் கழுத்து காலர் கொண்ட சுடிதார்கள்

New sudithar model 2022
New sudithar model 2022

உயர் காலர் கழுத்து, நீண்ட கைகளுடன் தைக்கப்படும் சுடிதார்கள் புதுப்பாணியாகி உள்ளன. காட்டன் சில்க் க்ரஷ் மெட்டீரியலில் இவ்வகை சுடிதார் டிசைனைத் தைத்து அணியும்பொழுது அனைவராலும் உற்று நோக்கக்கூடிய நபராக நாம் இருப்போம்.

ஸ்ட்ரெயிட் கட் சுடிதார்கள்: பட்டு, பனாரஸ், ராசில்க் போன்ற துணிகளில் இதுபோன்ற ஸ்ட்ரெயிட் கட் டிசைனர் சுடிதார்களை அணியும் பொழுது அவை ஆளுமையான தோற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்பலாம். திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல இவ்வகை டிசைனர் சுடிதார்கள் சரியான தேர்வாக இருக்கும்.

New sudithar model 2022
New sudithar model 2022

ஸ்டைலிஷ் ப்ரோகெட் சுடிதார்: ப்ரோகெட் துணிகளில் ‘வி’ வடிவக் கழுத்து மற்றும் நீளமான நெட்டட் கை வைத்து தைக்கப்படும். டாப்பிற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சுடிதார் பேன்ட். பல்வேறு வண்ணங்களில் அழகான மற்றும் அளவான வேலைப்பாட்டுடன் தைக்கப்படும். இவ்வகை சுடிதார்கள் அணிவதற்கு நேர்த்தியானவையாகும்.

நீண்ட அனார்கலி சுடிதார்: நீளமான கௌன் போன்று அதிகமான ஃப்ளேர்களுடன் தரையைத் தொடும் மேலாடை அதற்கும் மேலே எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் வரும் நீளமான நெட்டட் அங்கி, முழு நீளக்கை, இதற்குத் தேவைப்பட்டால் அணிந்து கொள்ள நெட்டட் ஷால். இவ்வகை அனார்கலி சுடிதார்கள் பெண்களின் விருப்பத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Healthy food for Liver

இவை மட்டுமல்லாமல் ஃப்ராக் ஸ்டைல் அனார்கலி சுடிதார், காட்டன் அனார்கலி, லேர்யா சுடிதார், ஸ்டைலிஷ் பார்ட்டி வேர் அனார்கலி சுடிதார், கவர்ச்சியான மொகல் தோற்றத்துடன் கூடிய பாந்தனி அனார்கலி சுடிதார், கைகளால் செய்யப்பட்ட பாந்தனி சுடிதார் சல்வார் கமீஸ், புதிய வரவு ப்ரைடல் சுடிதார், க்ளாஸிக் கண்ணாடி வேலைப்பாட்டுடன் கூடிய அனார்கலி சுடிதார், டிசைனர் ஃபேஷன் சுடிதார், ஸ்பிலிட் சுடிதார் என பெண்களுக்கான சுடிதார் மாடல்களில் எத்தனையோ புதிய வகை டிசைன்கள் வந்து விட்டன.

பெண்கள் தங்களது உடல் நிறம் மற்றும் உடல் வாகிற்கு ஏற்றாற் போல் சுடிதார்களை கனக்கச்சிதமாக தைத்து அணியும் பொழுது அவை தன்னம்பிக்கையும், ஆளுமையும் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!