தமிழகத்தில் நெய்வேலி இந்தியா லிமெடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள ‘சுகாதார ஆய்வாளர்’ பணி இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 18 பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே காணலாம்.
பணி விவரம்
- சுகாதார ஆய்வாளர்
மொத்த பணியிடங்கள் – 18
வயது வரம்பு விவரம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு வருமானம் பணியின் அடிப்படையில் ரூ.38,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி
மேற்கண்ட பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Diploma in Health & Sanitation துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணிகளுக்கு Written Test அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் |NLC Recruitment 2023 | https://www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் Career என்றதை கிளிக் செய்ய வேண்டும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
மேற்கண்ட பணிக்கு UR/EWS/OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமானது ரூ.486 இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், SC/ST/EX serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.236 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.08.2023
இந்த பணி அறிவிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை பெற கீழயே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here