ஓணம் பண்டிகை எதிர்வரும் 29 ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுமா என தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஓணம் பண்டிகை எதிர்வரும் ஆகஸ்ட் 29 ம் தேதி கேரள மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலும் மலையாள சகோதர, சகோதரிகள் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதற்காக கேரள மக்கள் அதிகம் உள்ள தமிழக மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ஈரோடு, கோவை, நீலகிரி திருப்பூர் குமரி ஆகிய 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த கேரள மக்கள் ஆர்வத்துடன் தமிழ் மக்களுடன் இணைந்து பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகைக்கு சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டுமே தற்போது வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஏழு மாவட்டங்களிலும் இதுவரை விடுமுறை அறிவிக்கப்படாததால் அங்குள்ள கேரள மக்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.
விரைவில் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.