மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, அவரை அழிக்க முயன்றபோது மகாபலி சக்கரவர்த்தி திருமாலிடம் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களை காண ஒரு வரம் கேட்டதாகவும் அதனை ஏற்று திருமாள் அருள் புரிந்ததாகவும் நம்பிக்கை.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வருவதாகவும் அவரை வரவேற்கும் வகையில் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் வரவேற்று வருகின்றனர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய நாள் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவு பணியாளர்களுடன் அரசு கருவூலங்கள் செயல்படும் என்றும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 2ம் தேதி முழு நேர பணி நாளாக செயல்படும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னை மாவட்டத்திற்கும் வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் செம்படம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு, 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, செப்டம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முழு பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கும்போது, மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.