ரயில்வே துறையில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சகம், இந்தாண்டு ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி, ரயில்வே துறையில் குரூப் சி பிரிவில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 580 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதே போன்று, ரயில்வேயின் பாதுகாப்பு பிரிவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 924 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக ரயில்வே துறையில், சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக துறை சார்ந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பின்வரும் கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்
10th pass (OR) ITI from institutions recognised by NCVT/SCVT (or) equivalent (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
வயது வரம்பு : 18 – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பள விவரங்கள் : Rs. 22,500-Rs.25,380
தேர்வு எவ்வாறு நடைப்பெறும்?
கணினி அடிப்படையிலான சோதனைகள், உடற்திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவை RRB குரூப் D செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
தேர்வின் கேள்விகள், மற்றும் கால அளவு: பொருள் கேள்விகளின் எண்ணிக்கை – தலா 1 மதிப்பெண் கால அளவுபொது அறிவியல் 25 1 மணி 30 நிமிடம் கணிதம் 25 1 மணி 30 நிமிடம்பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு 20 1 மணி 30 நிமிடம்பொது விழிப்புணர்வு மற்றும் நடப்பு விவகாரங்கள் 30 1 மணி 30 நிமிடம் மொத்தம் 100
விண்ணப்பிக்கும் முறை:
RRB குரூப் D தேர்வு பல்வேறு கட்டங்களாக நடத்த ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் திட்டமிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்:
இந்திய ரயில்வே பிரிவுகளில் 2.5 லட்சம் காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். RRB குரூப் D தேர்வுக்கு
ரயில்வேயின் அதிகாரபூர்வ இணையதள முகவரி https://www.rrbcdg.gov.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) அட்டவணை மற்றும் அனுமதி அட்டை ஆகியவை ரயில்வே அதிகாரபூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.
தேர்வு தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வின் தேதியை பார்ப்பதற்கான இணைப்பு மற்றும் SC/ST மாணவர்களுக்கான தங்களுக்கு தேவையான விவரங்களை RRB இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த RRB குரூப் D 2023 வேலை வாய்ப்பு, இந்திய ரயில்வேயில் நல்ல ஊதியத்துடன் அரசுப் பணியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
அறிவிப்பு வெளியாகும் தேதி: இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் எங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில், ரயில்வே வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை உடனே பகிரப்படும் – இணையுங்கள் எங்களின் குழுவில் – Click here