Safety Precautions of Mobile Phone Drops in Water
Mobile Tech News WhatsApp Group – Click here
Safety Precautions of Mobile Phone Drops in Water ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் யாரும் தண்ணீரில் விழுந்த மொபைல் போனிக்கு வாரண்டி கொடுப்பது கிடையாது. எனவே உங்களுடைய ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால், போனை மீண்டும் இயக்க வைக்க குறைந்தப்பட்சம் நீங்கள் செய்ய வேண்டிய செயல்முறைகளை அறிந்து கொள்ளுங்கள் .

போன் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவை :
1. உங்கள் ஸ்மார்ட் போன் தவறி தண்ணீரில் விழுந்துவிட்டது என்றால், உடனடியாக அதனை எடுத்து சுவிட்ச் அப் செய்ய வேண்டும். அதிகப்படியான தண்ணீரில் மொபைலுக்குள் செல்வதை தடுக்க டெம்பர் கிளாஸ், பேக் சைடு போன் கவர் ஆகியவற்றையும் கழற்றி விட வேண்டும்.
2: இது நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒன்று. தண்ணீரில் தவறி விழுந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். ஸ்மார்ட் போனின் முன்புறம், பின்புறம் என அனைத்து சைடுகளிலும் நன்றாக துடைத்து எடுங்கள். போர்ட் பாயிண்ட்களை காட்டன் அல்லது பஞ்சு கொண்டு துடைக்கலாம். பிறகு போனை டிஷ்யூ பேப்பரினாலோ அல்லது கையடக்க துணி கொண்டோ நன்கு சுற்றி வைக்க வேண்டும்.
3: போர்ட்கள் மற்றும் செல்போன் கேப் வழியாக தண்ணீர் கசியும் என்பதால் ஸ்மார்ட்போனை வேகமாக அசைக்க வேண்டாம். மேலும், சிம் கார்டு வெளியே எடுக்கப்பட்டதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்
4: தண்ணீருக்குள் விழுந்த போனை குறைந்தபட்சம் ஆறு மணிநேரத்திற்காவது ஒரு காற்றுபுகாத பைக்குள் அடைத்து வைப்பது நல்லது. அரிசி ஈரப்பதத்தை உறிஞ்ச கூடியது என்பதால், கவரில் அரிசியுடன் சேர்த்து தண்ணீரில் விழுந்த போனையும் வைக்கலாம்.
5: செல்போனுக்குள் புகுந்த நீரை காயவைக்க எக்காரணம் கொண்டும் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தக்கூடாது. ஹேர் டிரையரிலிருந்து வரும் மிகவும் சூடான காற்று, போனுக்குள் செலுத்தும்போது போனில் உள்ள பலவீனமான மின்னணு சாதனங்கள் சேதமடையலாம் அல்லது ஹேர் ட்ரையரில் இருந்து வரும் காற்று, தண்ணீரை மேலும் வேகமாக செல்போனுக்கு தள்ளி நிலைமையை சிக்கலாக்கலாம்.
6: ஸ்மார்ட்போன் தண்ணீரில் தவறி விழுந்துவிட்டால் முழுவதும் காயாமல் சார்ஜ் செய்ய வேண்டாம். இது ஷார்ட் சர்க்யூட்டுக்கு வழிவகுக்கலாம் மற்றும் இதனால் செல்போன் முற்றிலும் சேதமடையும் வாய்ப்பு அதிகம்.