SBI PO Recruitment 2023
SBI PO Recruitment 2023 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ப்ரோபேசனரி ஆபிஸர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 2,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளங்கள், தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை கீழே காணலாம்
வயது வரம்பு:
21 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 1.04.2022 க்கு பிறந்தவர்களும் 02.04.1993 க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்.டி/ பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். நேர்முகத்தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றிற்கு அழைக்கப்படும் போது பட்டம் முடித்ததற்கான சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். அதாவது நேர்முகத்தேர்வு அழைக்கப்படும் தேதிக்குள் டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணம்:
தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?: https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்திற்கு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 27 ஆம் தேதி ஆகும்.
- எழுத்து தேர்வு நவம்பர் மாதத்திலும்
- முதல் கட்ட தேர்வு முடிவு நவம்பர்/டிசம்பரில் வெளியாகுக்ம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?: சம்பளமாக மாதம் ரூ.63 ஆயிரம் வரை கிடைக்கும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை செய்வதற்கான Bond (ரூ.2 லட்சம்) சமர்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் “Probationary Officers”ஆக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களின் probation காலம் 2 ஆண்டுகள் ஆகும். பயிற்சி காலத்தில் குறைந்தபட்ச தகுதியை எட்டாவிடில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ள https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் பார்க்கவும்.