தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்க இருந்த பள்ளிகள், வெப்பச்சலனம் காரணமாக ஜூன் 12ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீண்ட நாட்கள் விடுமுறையை சிறப்பித்த மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் விடுமுறையா? என பலரும் வேதனை தெரிவித்து வந்தனர்.
கன மழை
இந்நிலையில் தமிழகத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு கடந்த வாரம் இரண்டு நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படவில்லை. கன மழை உள்ள பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் விடுமுறைக்கான மகிழ்ச்சி செய்தி பற்றி பார்க்கலாம்

விடுமுறை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளின் போதும் அரசு ஊழியர், அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜூன் 29ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ஈத் அல் அதா(பக்ரீத்) பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்தப் பண்டிகை பிறை தெரிவதை வைத்தே கொண்டாடப்படுவதால் ஜூன் 29 ஆம் தேதி இஸ்லாமியர்களின் கணிப்பு படி அன்று தான் முழு சந்திரன் தெரியவுள்ளது. அந்த வகையில் ஜூன் 29ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் இந்த பண்டிகை அனைத்து இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்பட உள்ளது.
பக்ரீத் பண்டிகை:
வரும் ஜூன் 29 ஆம் தேதி தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனையடுத்து அன்று பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூன் 29 அன்று அரசு விடுமுறை எனவே மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |