அன்று இட்லி விற்றவர் இன்று ஒரு நிறுவனத்திற்கு சொந்தக்காரர் தேன்மொழியின் வெற்றி கதை Success story of thenmozhi rahman in tamil

Success story of thenmozhi rahman in tamil

Success story of thenmozhi rahman in tamil: தேன்மொழி, அன்று இட்லி விற்றவர் இன்று தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ரூ. 50,000 மாத சம்பளம் கொடுக்குகிறார். திருமதி தேன்மொழியின் வெற்றி கதையை இந்த சிறப்பு பதிவில் பார்க்கலாம்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply
Success story of thenmozhi rahman in tamil
Success story of thenmozhi rahman in tamil

தேன்மொழியின் – நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்

ஈரோட்டில் பள்ளிப்பலம் என்ற ஊரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்,அவருக்கு இரு தங்கைகள் உள்ளனர். தேன்மொழியின் சிறுவயதில் அவரின் தந்தை மாரடைப்பால் காலமானார்.இதனை தொடர்ந்து தேன்மொழியின் தாய் தன்னுடைய இரண்டு மகள்களை கரூர்க்கு அழைத்து செல்கிறார். தேன்மொழியை அவரின் பாட்டி மற்றும் தாத்தாவிடம் விட்டு செல்கிறார்

அவரின் பாட்டி மற்றும் தாத்தா இட்லி வியாபாரம் செய்து வந்தனர், முதலில் தேன்மொழியை படிக்க வேண்டாம் எங்களுடன் இட்லி விற்கலாம் என கூறியிருந்தனர். ஆனால் தேன்மொழி என்னால் இட்லி விற்றுக் கொண்டே படிக்க முடியும் என இட்லியை விற்றுக் கொண்டு படிப்பையும் தொடர்ந்தார்.

தினமும் காலையில் அவர் 20 கிலோமீட்டர் பயணம் செய்து ஈரோட்டில் உள்ள பனியன் மார்க்கெட்டில் 300 இட்லியை காலை 8 மணிக்குள் விற்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் பள்ளிக்கு செல்ல முடியும். பனியன் மார்க்கெட் வந்துள்ளவர்களை ஒவ்வொருவரிடம் இட்லி வாங்கிக் கொள்கிறீர்களா என கேட்டு எட்டு மணிக்குள் அனைத்து 300 இட்லிகளையும் விற்றுவிட்டு பள்ளிக்கு செல்வார் தேன்மொழி. இப்படியே இட்லிகளை விற்றுக் கொண்டு தன்னுடைய 12 ஆம் வகுப்பு வரை முடித்தார் 12 ஆம் வகுப்பு தேர்வில் அவர் நல்ல மதிப்பெண்களை பெற்றிருந்தார்

Check Latest Government Jobs

கல்லூரி படிப்பு

கடும் பண நெருக்கடியால் கல்லூரி படிப்பை தொடங்க முடியாமல் இட்லி வியாபாரதையே விரிவு படுத்துகிறார் தேன்மொழி. அதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் பகுதி நேர வேலையில் செல்கிறார். மருந்து விற்கும் நிறுவனத்தில் பகுதி நேர வேலைக்கு செல்கிறார் அங்கு அவர் மருத்துவ பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் உரையாடுவதை கண்டு மிகவும் ஆச்சரியப்படுவார். இதனைக் கண்ட அந்த மருத்துவ நிறுவனத்தின் முதலாளி தேன்மொழியை மேற்படிப்பு படித்த ஏற்பாடு செய்கிறார்.

கனவை நோக்கி

மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெறுகிறது. இதனை அறிந்து தேன்மொழி தனக்கு பல கனவுகள் உள்ளது தற்பொழுது திருமண வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

இதனை அடுத்து அவரின் பாட்டி நீ இனி உன்னுடைய அம்மாவிடமே இருந்து கொள்ளலாம் என்று சொல்லி தேன்மொழியை அவரின் அம்மாவுடன் அனுப்பி விடுகிறார். சிக்கலில் இருந்து மீண்டு தேன்மொழி தற்பொழுது தாயின் வீட்டுக்கு செல்கிறார் அங்கு அவர் ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரதிநிதியாக சேர்கிறார். அங்கு அவரின் பாட்டி சொல்லிக் கொடுத்த மார்க்கெட்டிங் யுத்திகளை பயன்படுத்துகிறார் அது அவருக்கு நல்ல பலனை தந்தது.

எதிர்பாராத விபத்து

ஒரு நாள் தேன்மொழி அவரின் பாட்டியை சந்தித்து விட்டு பேருந்தில் வீடு திரும்புகிறார் அப்பொழுது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தை சந்திக்கிறது அவ்விபத்தில் தேன்மொழியின் கால் உடைந்து விட்டது.தன்னுடைய காலை சரி செய்வதற்காக வைத்தியசாலையை அடைந்து தன்னுடைய காலை சரி செய்து கொள்கிறார். அவரின் காலை சரி செய்து கொள்ள ஒரு வருடம் ஆகிறது இந்த ஒரு வருடத்தில் அவர் புத்தகங்களை வாங்கி பழிக்கிறார் அதில் வீட்டிலிருந்து வேலை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்கிறார் அதன் மூலமாக அவர் ஒரு கம்பெனியை தொடர்பு கொள்கிறார் அதில் உங்களுக்கு கணினி பற்றி தெரிந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே தேன்மொழி ஒரு கம்ப்யூட்டரை தவணை முறையில் வாங்கினார். அதை வைத்து கணினி பற்றிய தகவல்களை தெரிந்து கொள்கிறார். வீட்டிலிருந்து வேலை செய்து முதல் சம்பளமாக 730 ரூபாய் பெறுகிறார்.

300 நபர்களுக்கு கற்று கொடுக்கிறார்

அதனைத் தொடர்ந்து தேன்மொழி தான் தெரிந்து கொண்ட யுக்திகளை 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ப்ரொஜெக்டரின் துணை கொண்டு வீட்டிலிருந்து சம்பாதிப்பது எப்படி என்று நுணுக்கத்தை கற்றுக் கொடுக்கிறார். அதன் மூலமாக ஒரு ஈட்டிய வருமானத்தில் தன்னுடைய தங்கைகளுக்கான படிப்பு செலவுகளை மேற்கொள்கிறார் மற்றும் தன்னுடைய தாய்க்கு ஒரு வீட்டையும் கட்டிக் கொடுக்கிறார். பிறகு தேன்மொழிக்கும் அவரது தங்கைகளுக்கும் திருமணம் நடைபெற்றது

Success story of thenmozhi rahman in tamil
Success story of thenmozhi rahman in tamil

சொந்த நிறுவனம்

தேன்மொழி அதன் பிறகு ஒரு நிறுவனத்தை (Jobs World Solutions) தொடங்குகிறார். கல்லூரியில் படிக்காத நான் தற்பொழுது கல்லூரிகளுக்கு சென்று பட்டதாரிகளை நேர்காணல் மூலம் பணி அமர்த்துகிறேன் மற்றும் அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் 50 ஆயிரம் வரை கொடுக்கிறேன் என தேன்மொழி கூறுகிறார். மேலும் அவர் தன்னுடைய சிக்கல்களை சந்தர்ப்பங்களாக மாற்றி தன்னுடைய வாழ்க்கையை பாதைக்கு அழைத்து செல்கிறார். தற்பொழுது அவருடைய கம்பெனியில் 300க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்

நம்மால் பலவிதமான சிக்கல்களை வாய்ப்புகளாக மாற்ற முடியும் என்று நினையுங்கள் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும் அன்று இட்லி விற்ற நான் இன்று ஒரு கம்பெனிக்கு முதலாளி என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னால் முடியும் மற்றும் என்னுடைய தன்னம்பிக்கை, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது என்கிறார் தேன்மொழி.

More about Mrs. Thenmozhi

Company Website – Click here

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!