Tamilnadu Schools Reopen Details
Tamilnadu Schools Reopen Details தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்குவது குறித்து சமீபத்தில் தான் அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கமானது கடந்த சில ஆண்டுகளை விட அதிகமாக இருந்தது. இதனால், பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு, தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 5 ம் தேதியில் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

கோடை வெயில்
‘கோடை வெயில் கொளுத்துவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது. அதனால் மே 1ம் தேதி முதல் கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2023-24ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பதற்கான நாட்கள் குறித்த விவரங்களை இம்மாத தொடக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார். அதன்படி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1ம் தேதியும், தொடக்க கல்வியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பெற்றோர்கள் கோடை வெயிலின் தாக்கத்தால் பல வித அலர்ஜி, வேர்க்குரு உள்ளிட்ட பல வகை நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகின்றனர். இதனால், மாணவர்கள் எந்தவித சிரமமுமின்றி புதிய வகுப்புகளுக்கு செல்வார்கள் என சில பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூன் 12
இந்நிலையில் இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது பள்ளிகள் ஜூன் 12ம் தேதி திறக்குமாறு அரசு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார். இதனால் மேலும் பள்ளிகள் திறப்பு தள்ளிபோகுமா என்று பொறுத்திருந்து தான் காண வேண்டும்.