TN 12th Original Marksheet 2023
பொதுத்தேர்வுகள்:
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம் இருவேறு தினங்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
மதிப்பெண் சான்றிதழ் நகல்:
இந்த நிலையில் இந்த தேர்வெழுதிய மாணவ மாணவியருக்கு ஏற்கனவே மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்கப்பட்டுவிட்டன. அதன் அடிப்படையில் மாணவ மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்து இருக்கின்றனர். இன்னும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாத சூழலில் தற்போது தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அசல் மதிப்பெண் சான்றிதழ்:
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது, “மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates)/ மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வழங்குதல்.
மார்ச் / ஏப்ரல் 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 31.07.2023 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates) மதிப்பெண் பட்டியலினை (Statement Of Mark) பெற்றுக்கொள்ளலாம்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது