இந்தியாவில் நடப்பு மாதமான ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை நாட்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
இந்தியாவில் நடப்பு ஆண்டு கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. இத்தகைய சூழலில் மக்கள் வீட்டை விட்டு கூட வெளியே செல்ல முடியாத சூழலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் தாமதமாகவே திறக்கப்பட்டது. தற்போது வகுப்புக வழக்கம் போல நடைபெற்று வருகிறது. தற்போது மாதத்திற்கான விடுமுறை நாட்களை அறிந்து கொள்வோம்.
இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்
இதனால் மாணவர்கள் எப்போது விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி.

ஆகஸ்ட் மாத விடுமுறை:
- 05.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
- 06.08.2023 – ஞாயிறு
- 12.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
- 13.08.2023 – ஞாயிறு விடுமுறை
- 15.08.2023 – சுதந்திர தினம்
- 16.08.2023 – பார்சி புத்தாண்டு
- 19.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
- 27.08.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
- 29.08.2023 – ஓணம்
- 30.08.2023 – ரக்ஷா பந்தன்
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறை நாட்கள்
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் விடுமுறை நாட்கள்
- 05.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
- 06.08.2023 – ஞாயிறு
- 12.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
- 13.08.2023 – ஞாயிறு விடுமுறை
- 15.08.2023 – சுதந்திர தினம்
- 19.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
- 27.08.2023 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
உள்ளூர் விடுமுறை
ஆகஸ்ட் 3
தமிழ்நாட்டில் தலைவர்கள் தினம், விசேஷ பண்டிகை உள்ளிட்ட தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக, ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 9
அதேபோல் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இந்த நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.