தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி துவங்க இருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடி மாற்றத்தினை அறிவித்துள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
காலாண்டுத் தேர்வு:
தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், தேர்வு துவங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் பொது வினாத்தாள் முறையை அமல்படுத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், வினாத்தாள் லீக் ஆவதனை தடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கல்வி அலுவலகத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட கவர் மூலமாக வினாத்தாள் கொண்டு செல்லப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலமாக பிரிண்டர் மற்றும் பேப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, முறையாக காலாண்டு தேர்வினை நடத்தும்படி பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.