தமிழகத்தில் காலாண்டு தேர்விற்கு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் பக்காவாக முடிவடைந்துவிட்டன. 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 முதல் 27 வரை தேர்வுகள் நடக்கின்றன.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
அதன்பிறகு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தொடர்பாக சர்ச்சை நீடித்து வந்தது. அதாவது, பஞ்சாங்க முறைப்படி செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறை
இதைக் குறிப்பிட்டு நடப்பு 2023ஆம் ஆண்டிற்கான காலாண்டர் அச்சிடப்பட்டது. ஆனால் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று தமிழக அரசின் விடுமுறை கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திருத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்து வந்தது.
தமிழக அரசு அறிவிப்பு
ஆனால் அரசு தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. ஒருகட்டத்தில் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தன. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சில தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்வு தேதியை மாற்ற வாய்ப்பு
அரசு தரப்பில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதியில் இருந்து தான் காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. இதனால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் சில தனியார் பள்ளிகளில் 18ஆம் தேதி காலாண்டு தேர்வு வைத்துள்ளன. குறிப்பாக தொடக்க பள்ளி மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையில் பார்க்கலாம்.
இதன் காரணமாக சிக்கல் எழுந்துள்ளது. தற்போது அன்றைய தினம் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் சம்பந்தப்பட்ட தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.