TN Rain Leave News July 2023
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில், “வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (ஜூலை 10) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

11.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.07.2023 முதல் 16.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் மருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்
மழை காரணமாக ரயில் ரத்து
காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக செல்லும் மதுரை – டேராடூன் அதிவிரைவு விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே துறை அறிவிப்பு!
பள்ளிகள் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு :
மேலும், இந்த கனமழையால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது.
பள்ளிகள் விடுமுறையை ஈடுசெய்ய:
இந்த விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நள்ளிரவு பெய்த கனமழை ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சரி செய்து தண்ணீர் அக்கற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |