தமிழகத்தில் மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பாடத்திட்டங்கள் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்வுகளின் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதற்கான உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரை நடத்தப்படும்.

தமிழக பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எப்போது?
இதற்கிடையே, இந்த கல்வி ஆண்டுக்கான நாள்காட்டியை பள்ளிகள் திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டது. அதில்எந்தெந்த நாட்களில் பள்ளிகள் இயங்கும், விடுமுறை விவரங்கள், காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. சூழலுக்கேற்ப அதில் மாற்றம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது, எனவே செப்டம்பர் 27ம் தேதிக்கு பிறகு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி தேர்வு கால அட்டவணையை முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ் வெளியிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
- உத்தேச கால அட்டவணை மாணவர்கள் நலன்கருதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 15 முதல் 27-ந் தேதி வரை நடைபெறும்