TN School Reopening Date 2023 tamilnadu
TN School Reopening Date 2023 tamilnadu தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரு முறை மாற்றியமைக்கப்பட்டது, இந்நிலையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 12 ஆம் தேதி (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மற்றும் ஜூன் 14 ஆம் தேதி (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை)திறக்கப்படவுள்ளது
தற்போது அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

முன்னேற்பாடு பணிகள்:
TN School Reopening Date 2023 tamilnadu தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதி வரை வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தது. அதன்பிறகு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதல் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும், ஜூன் 5ம் தேதி முதல் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 6 to 12ம் வகுப்புகள் ஜூன் 12ம் தேதியும், 1 to 5 ம் வகுப்புகள் ஜூன் 14ம் தேதியும் வகுப்புகள் தொடக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை பணிகள், மின் இணைப்பு சரி பார்ப்பு, கட்டடங்கள் சீரமைப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது ‘No School bag’ என்ற புதிய திட்டத்தை வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதத்திலும் உள்ள 4வது சனிக்கிழமையும் பேக் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும். அன்று நாள் முழுவதும், SCERT-ன் வழிகாட்டுதலின்படி கலாச்சார நிகழ்ச்சிகள், விவாதங்கள், வினாடி-வினா, பயிலரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மாணவர்களை மையமாக வைத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |

TN School Reopening Date 2023 tamilnadu

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 12 ஆம் தேதி (6 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மற்றும் ஜூன் 14 ஆம் தேதி (1 முதல் 5 ஆம் வகுப்பு வரை) திறக்கப்படவுள்ளது