TN Schools Reopen 2023 Latest News
TN Schools Reopen 2023 Latest News தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்தன. இதனையடுத்து, தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
கோடை வெயில்
ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. ஆகவே, பள்ளிகள் திறப்பு தாமதமாகலாம் என்ற தகவல்கள் வெளிவந்தன. இந்த தகவல்களுக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திரு.அன்பில் மகேஸ், “ “ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழக முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் 1ம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி துவங்கும். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் மார்ச் 19 ஆம் தேதி முதல் தொடங்கும். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்றார்
பாட புத்தகங்கள்
மேலும், ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது. அதேபோல் கல்வி சார்ந்த உபகரணங்களும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முன்கூட்டியே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
பெற்றோர்கள் இது இது கோடை விடுமுறை என்பதால், மாணவர்களை அறிவு சார்ந்த கல்வி நிலைய நூலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அருகில் உள்ள நூலகங்களுக்கு மாணவர்களை அனுப்பி அவர்கள் அங்கு படிக்கத் தொடங்கினால், பின்னர் வேறு நூலகம் சென்று படிக்கும் ஆர்வத்தை வளர்த்து கொள்வார்கள்.
மேலும், “மத்திய தணிக்கை துறை அறிக்கையில், கடந்த ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். குறிப்பாக பள்ளிகள் தரும் உயர்த்தப்பட்டதில் விதிவிலக்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளை தரமாக இருக்கும் போது, எந்த பள்ளிக்கு தேவை என்பதை கண்டறிந்து தரம் உயர்த்த வேண்டும். அதில் எந்தவித தலையிடும் அழுத்தமும் இருக்கக் கூடாது. ஆசிரியர்கள் நியமனத்திலும் கூறப்பட்டுள்ள குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்வதற்கான அறிவிப்புகள் குறித்து அதன் தலைவருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்