தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் உள்ள தொடர் விடுமுறை நாட்கள் – மகிழ்ச்சி செய்தி TN September 2023 Holidays

TN September 2023 Holidays

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட இருந்தது. ஆனால் கோடை வெயில் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காணப்பட்டதால், ஜூன் 11ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த விடுமுறைகளை ஈடுசெய்ய சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். இதனால் வாரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் விடுமுறையா? என ஏங்கி வரும் மாணவர்களுக்கு பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்டங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே மிகுவும் மகிழ்ச்சி தான். தினமும் பள்ளிக்கு சென்று வீட்டு படங்களை தினமும் செய்து முடித்து, பாடங்களை தொடர்ச்சியாக கவனித்து வரும் மாணவர்களுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வந்தால் பெரும் மகிழ்ச்சி தான்.

ஒரு நாள் விடுமுறை என்றாலும் மாணவர்கள் அதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கும் தேதி கடும் வெயில் தாக்கம் காரணமாக இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டது.

மேலும் பள்ளிகள் திறப்பு இருமுறை தள்ளிவைக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது. இதனால் மாணவர்கள் மிகுவும் சோர்வுடன் காணப்படுகின்றனர்

செப்டம்பர் மாதத்தில் உள்ள விடுமுறை நாட்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்

TN September 2023 Holidays
TN September 2023 Holidays

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலேயே தொடர்ந்து விடுமுறை நாட்கள் வர இருக்கிறது. அதாவது செப்டம்பர் 5 (ஆசிரியர் தினம்), செப்டம்பர் 6 அல்லது 7 (ஜன்மாஷ்டமி), செப்டம்பர் 18 (விநாயகர் சதுர்த்தி) மற்றும் செப்டம்பர் 28 (மிலாத் அன்-நபி அல்லது இத்-இ-மிலாத்) என தொடர்ந்து முக்கிய பண்டிகைகள் வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

TN September 2023 Holidays – பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை

2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 4 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கி, செப். 27 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. செப். 28ஆம் தேதி காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 1 முதல்  3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப். 23ஆம் தேதி தேர்வு விடுமுறை தொடங்க உள்ளது. தேர்வு முடிந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பட்டியல்:
  • 06.09.2023 – ஜென்மாஷ்டமி விடுமுறை
  • 09.09.2029 – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
  • 18.09.2023 – விநாயகர் சதுர்த்தி
  • 23.09.2023 –  நான்காவது சனிக்கிழமை விடுமுறை
  • 28.09.2023 – மிலாத் அன்-நபி விடுமுறை
  • 23.09.2023 to 2.10.2023 – காலாண்டு விடுமுறை (1 முதல்  3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)
  • 28.09.2023 to 2.10.2023 – காலாண்டு விடுமுறை (4 முதல்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு)

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!