இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
TNPSC நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 30, 2021 TNPSC Current affairs September 2021
Join TN Study Corner | |
Click here | |
Telegram | Click here |
Govt Jobs | Click here |
1.பிஎம் போஜன் என்ற பெயரில் மத்திய உணவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
- அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிஎம் போஜன் என்ற பெயரில் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 795 கோடி செலவிடப்படும் இத்திட்டம் மூலம் மாணவர்களுக்கு ஒருவேளை சூடான உணவு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்
- நாடு முழுவதும் 11.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிஎம் முதல் திட்டம் செயல்படுத்தப்படும் இதன் மூலம் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர் என்று பிஎம் போதும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2. குஜராத் கடல் பகுதியில் புதிய புயல் ஷாகீன்
- குஜராத் கடற்பகுதியில் ஷாகீன் என்ற புதிய புயல் அக்டோபர் 1 காலைக்குள் உருவாகி பாகிஸ்தான் நோக்கி செல்லக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இப் புயலுக்கு கத்தார் நாடு அளித்த பரிந்துரையின் படி ஷாகீன் என பெயரிடப்பட்டுள்ளது.
3.சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு தமிழக அரசு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு.
- சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கப்பட்டு இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியீட்டுள்ளது
- இந்தத் திட்டத்தின் கீழ் சென்னையை மேம்படுத்தி அழகு படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
- மேலும் சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன சென்னையில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு தமிழகத்தின் பாரம்பரிய பாதுகாக்கப்படும் சுகாதாரம் கட்டமைப்பை மேம்படுத்தவும் நகரின் பசுமை பரப்பு பாதுகாப்பு நீர்நிலைகள் புனரமைப்பு நிலத்தடி நீர் சேமிப்பு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
4. மதுரவாயல் துறைமுகம் இடையே இரண்டு அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்.
- நாட்டின் முதல் முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமைய உள்ள மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலைகள் விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும் திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீடு செய்யப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்
- மேலும் மதுரவாயல் துறைமுகம் சாலை யின் முதல் அடுக்கில் பேருந்துகள் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது இதில் அணுகு சாலை அமைப்பதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது இரண்டாம் அடுக்கில் நான்கு வழிச்சாலை ஆனது மதுரவாயல் துறைமுகம் வரை செல்லும் இதில் கண்டைனர் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்லும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடுதல் எடையை தாங்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட உள்ளது இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மூன்று மாதங்களில் முடிக்கப்படும் திட்ட அறிக்கை கிடைத்ததும் நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலை துறை செயலாளர் தீரஜ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
5. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனைக்கு பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனைக்கு பதிவு செய்ய e-DPC என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
- இச்செயலியில் விவசாயிகள் தங்களின் பெயர் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம் இந்த செயலில் விவசாயிகள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பதிவேற்றம் செய்யலாம்
- விவசாயிகள் செயலியில் முன் பதிவு செய்தவுடன் விவசாயம் நிலம் இருக்கும் கிராமத்தில் அடிப்படையில் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இனிய வழியின் மூலமாக கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பெயர் நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் விவசாயிகள் அந்தக் குழுவின் செய்தியின் அடிப்படையில் நீண்டநேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன் பெறலாம்
6. வரும் முன் காப்போம் திட்டம் தொடக்கம்.
- வாழப்பாடியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இத்திட்டத்தை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இணைக்கவும் ஓராண்டில் 1250 முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
7. 60 வயது முதியோர் வேலை தேட புதிய இணையதளம் தொடக்கம்.
- 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மீண்டும் வேலைவாய்ப்பு தேடுவதற்கு இணையதளத்தை மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
- Senior Able Citizens for Re-Employment in Dignity (SACRED) என்ற பெயரில் இணையதளத்தை அறிமுகம் செய்கிறது இது இன்று(October – 1) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது மீண்டும் வேலை செய்ய விரும்பும் முதியோர் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.
- இந்தப் Portal செயல்பாட்டுக்கு வந்ததும் 60 வயது முதியோர் தங்களுடைய பெயர் கல்வித் தகுதி அனுபவம் திறமை எந்த துறையில் ஆர்வம் போன்ற தகவல்களை பதிவு செய்ய வேண்டும் இதன் மூலம் எத்தனை ஊழியர்கள் தேவை எந்தெந்த துறையில் ஊழியர் தேவை என்பதை நிறுவனங்கள் முடிவு செய்து வேலை வாய்ப்பை வழங்கும்.
8. இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீராங்கனை கல்யாணி
- இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் 27 வயதான கல்யாணி பொடேகர்
- சமீபத்தில் என்சிஆரின் புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 2.08 நிமிடங்களில் இலக்கை கடந்து அசத்தினார் கல்யாணி பொடேகர்
- இவர் மத்திய பிரதேசத்தை சார்ந்தவர்
9. 38-வது பிரகதி திட்டம்
- மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்திறனை மதிப்பீடு அரசு திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துதல் ஆகியவையே பிரகதி என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015-ல் இந்த பிரகதி திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்த பிரகதி கூட்டத்தில் 8 திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன இவற்றில் நான்கு ரயில்வே அமைச்சக திட்டங்கள் 2min அமைச்சக திட்டங்களாகும். இது தவிர சாலை போக்குவரத்து அமைச்சகம் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் தலா ஒரு திட்டமும் ஆய்வு செய்யப்பட்டன.
Join TN Study Corner | |
Click here | |
Telegram | Click here |
Govt Jobs | Click here |