1.அக்டோபர் 1- தன்னார்வ ரத்த தான நாள்
கருப்பொருள்: உயிர் காக்கும் உதிர தானம்
2. எல்ஐசி நிர்வாக இயக்குனராக பி.சி. பட்நாயக் பொறுப்பேற்பு
3. தூய்மை இந்தியா 2.0, அம்ருத் 2.0 திட்டங்கள் தொடக்கம்
தூய்மை இந்தியா 2.0, அம்ருத் 2.0 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கடந்த 2014இல் தூய்மை இந்தியா திட்டம் நகர்ப்புற மேம்பாட்டுக்காக தொடங்கப்பட்டது
கடந்த 2015 இல் நகர்ப்புற மாற்றம் புதுப்பித்தலுக்கான அடல் இயக்கம் தொடங்கப்பட்டது
தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் மூலம் குப்பைகள் இல்லாத நகரங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் கழிவுநீர் வசதி மேம்படுத்தப்படும் மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகிக்க உறுதி செய்யப்படும்
கடந்த 2014ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன
4. 3வது மாதமாகும் ஜிஎஸ்டி வசூல் ரூ 1 லட்சம் கோடியை தாண்டியது.
ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூலை மாதத்தில் ரூபாய் 1.12 லட்சம் கோடியாகும், ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் 1.16 லட்சம் கோடியாகவும் இருந்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1.17 லட்சம் கோடியாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
5. தமிழகத்திற்கு ரூபாய் 1112 கோடி கடன் வழங்க உள்ளது உலக வங்கி
சென்னை நகரை பருவநிலை மாற்றங்களுக்கு உகந்த அதிக பசுமை நிறைந்ததாகவும் வாழ்வதற்கு தகுதியுள்ள வகையிலும் உலகத் தரத்திலான நகரமாக உருவாக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு உதவும் வகையிலும் இந்த கடனை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
6. பாதுகாப்பு தொழில்துறை காண கூட்டு செயற் குழு அமைப்பு
இந்தியா அமெரிக்கா பாதுகாப்பு தொழில்துறைகள் தொடர்பான கூட்டுக்குழு அமைக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
7. ஜல் ஜீவன் செயலி அறிமுகம்
ஜல் ஜீவன் செயலியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலி மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்படும் குடிநீர் விநியோகத் திட்டம் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதுடன், அதன் மூலம் பயனடைபவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு கிடைக்கும்
8. பிங்க் டெஸ்ட் ஆஸ்திரேலியா இந்தியா மகளிர் கிரிக்கெட் போட்டி
ஸ்மிருதி மந்தனா சாதனை.
பிங்க் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது இதில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்துள்ளார்.
பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் ஸ்மிருதி மந்தனா அவர்கள்.
மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் ஸ்மிருதி மந்தனா