TNPSC Group 4 Certificate Upload தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது. தேர்வர்கள் தேர்வாணையத்தின் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளாலாம்.
குரூப் 4ல் அடங்கிய காலிப்பணியிடங்கள் விவரம் பின்வருமாறு: கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியில் 425 காலியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிகளில் 5,102 பணியிடகளும், வரித் தண்டலர் அடங்கிய பணிகளில் 69 பணியிடங்களும், தட்டச்சர் (Typist) பணியில் 3,314 காலி இடங்களும், சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியில் 1,186 காலி இடங்களும், பண்டக காப்பாளர் (Store keeper) பணியில் 1 இடமும் நிரப்பப்பட உள்ளன,
TNPSC Group 4 Certificate Upload
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் தேர்வுகளில் பல்வேறு இடஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில், சாதி அடிப்படையிலான வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையின் கீழ், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 1% பழங்குடியினர் பிரிவுக்கும், 15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 3% ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவினருக்கும், 26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்(முஸ்லீம் அல்லாதோர்), 3.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்க்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.
அரசு வேலை பெற வேண்டும் என்பதை கனவாக கொண்டவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 10,117 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏராளமானோர் இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தது.
‘குரூப் – 4’ தேர்வு முடிவுகள், மார்ச் 24ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு, 2.5 பேர் என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
பட்டியலில் பதிவெண் உள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, ‘ஸ்கேன்’ செய்து, ‘இ – சேவை’ மையம் வழியாக, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், வரும் 13ம் தேதி முதல் மே 5ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.