Join TN Study Corner | |
Click here | |
Telegram | Click here |
செப்டம்பர் 25- பண்டிட் தீனதயாள் உபாத்தியாய
(Pandit Deendayal Upadhyaya)
அவர்களின் 105வது பிறந்த தினம் இன்று !
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
இவரின் பிறந்ததினம் செப்டம்பர் 25
அந்தியோதயா திவாஸ் தினம் ( antyodaya diwas) வாக கொண்டாடப் படுகிறது.
- அந்தியோதயா என்றால் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோரை உயர்த்துதல் என்று அர்த்தம்.
- இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாய
- உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் நகலா சந்திரபான் என்ற கிராமத்தில் 1916 இல் பிறந்தார்.
- பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.
- இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர். இந்தியில் மிகவும் பிரபலமான ‘சந்திரகுப்த மவுரியா’ என்ற நாடகத்தை ஒரே மூச்சில் எழுதிவிட்டார். தேசிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க ‘ராஷ்ட்ர தர்ம’ என்ற மாத இதழை 1940-ல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் ‘பாஞ்சஜன்யா’ என்ற வார இதழையும் ‘சுதேசி’ என்ற நாளிதழையும் தொடங்கினார்.
- 1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
- ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது உபாத்யாயால் அரசியல் வேலைத்திட்டமாக வடிவமைக்கப்பட்டு 1965 ஆம் ஆண்டில் ஜனசங்கத்தின் அதிகாரப்பூர்வ கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளின் தொகுப்பாகும்.
- இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
Exam Points :
உத்தரப் பிரதேசம்
மாநிலத்தில் உள்ள மொகல்சாராய் ரயில் நிலையம் ,தீன் தயாள் உபாத்யாயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே மொகல்சாராய் ரயில்நிலையம் உள்ளது
குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தின் பெயரை தீன் தயாள் துறைமுகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது….
2020 இல் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் 63 அடி உயர பஞ்ச லோக சிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார்.
தனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்டம்…!
ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம். இந்த திட்டம் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு அங்கமாகும் ( National rural livelyhood mission ) இரு வகையான நோக்கங்களை கொண்டது இந்த திட்டம் . ஊரக ஏழ்மை குடும்பங்களின் வருமானத்தை ஊக்குவித்தல் மற்றும் ஊரக இளைஞர்களை தொழில் சார்ந்து இணைக்க அவர்களின் திறமையை ஊக்குவித்தல் போன்றவையாகும்.
தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11இல் காலமானார்.
Join TN Study Corner | |
Click here | |
Telegram | Click here |