பென்சில் போல் வாழ்ந்தால் Tamil Motivational story
ஒருவனுடைய உழைப்பு என்றுமே வீணாவதில்லை. அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம். பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டு விடக்கூடாது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
பல மாதங்கள் தொடர்ந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்.
ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்..வெற்றிக்கு யார் உங்களுக்கு வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள்.இவர் தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க பிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்!
நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு ஐந்து செய்திகளைக் கற்றுத் தந்தது.
பல கருத்துக்களையும், சிந்தனைகளையும் எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போது எல்லாம் கூர்மையடைகிறது.தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.
சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டு இருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது.
இதைப் பார்த்துத் தான் என் வாழ்க்கையை நான் சீர் செய்து கொண்டேன்.
பல அரிய செயல்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு இருக்கிறேன்..
சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.
தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.
வெளிச்சூழலில் புகழ் வந்தாலும், பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.
கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
காலத்தில் நம் சுவட்டைப் பதித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்..
ஆம்.,நண்பர்களே..,
அடக்கம் தான் வாழ்வின் மிகப்பெரிய செல்வம்..
அடக்கம் நம்மை உயர்ந்த இடத்தில் வைக்கும்.
செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள். .
கடின உழைப்பு ஒன்று தான் ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்