school colleges leave mandous storm
புதிதாக உருவாக உள்ள மாண்டஸ் புயல் காரணமாக நாளை முதல் 3 நாட்கள் வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது
இந்நிலையில் தான் புதிதாக புயல் உருவாகலாம் என சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியிருந்தது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கையும் விடுத்து இருந்தது.
மாண்டஸ் புயல்
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய தகவலில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதன்படி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. இது புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
நாளை, டிசம்பர் 9ல் கனமழை
இந்த வானிலை மாறுபாடு காரணம் இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யலாம். மேலும் நாளை டிசம்பர் 9ல் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது
நாளை மறுநாள் எப்படி?
நாளை மறுநாளான டிசம்பர் 10 ல் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இதுதவிர ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 17 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ( 09.12.2022 ) விடுமுறை
* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருப்பத்தூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )
* புதுச்சேரி, காரைக்கால் 2 நாட்களுக்கு ( பள்ளி, கல்லூரிகளுக்கு )