TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஊக்கத்தொகை TNPSC Scholarship 2023

TNPSC Scholarship 2023

TNPSC Scholarship 2023 மத்திய மாநில அரசுகளின் தேர்வாணையம் அறிவிக்கும் போட்டித்தேர்வுகளில் லட்சக்கணக்கான பேர் பங்கேற்று வருகின்றனர். இந்த தேர்வுகளில் வெற்றி பெற பல இளைஞர்கள் தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பயின்று வருகின்றனர். ஆனால் வசதியில்லாத மாணவர்கள் வறுமை நிலை கருதி முறையான பயிற்சி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

TNPSC Scholarship 2023
TNPSC Scholarship 2023

இதை கருத்தில் கொண்டு IAS, IPS மற்றும் “குரூப் 1” ஆகிய முதன்மை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ரூ.50,000 பயிற்சி கட்டணமாக வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அதேபோல் TNPSCயின் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ரூ.25,000 உதவி தொகை மூன்று முறை மட்டுமே வழங்கவும் முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் பயன் பெற விரும்புபவர்கள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் உள்ளிட்ட சில தகுதிகள் வரையறுக்கப்படும். மேலும் இத்திட்டத்தை தாட்கோ நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு செயல்படுத்த உள்ளது என தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின நலத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தை  வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டுதிட்டத்தில், குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. மேலும், குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுத் திட்டம், தேர்வர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!