TNPSC Group 4 2022 vacancies increased notification
TNPSC Group 4 2022 vacancies increased notification 7301 குரூப் 4 நிலை காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என எதுவும் இல்லாமல் நேரடி நியமன எழுத்துத் தேர்வின் மூலமே இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் தங்களது உழைப்புகளை, திறமைகளை ஒட்டுமொத்தமாக இந்த தேர்வில் செலுத்தியிருக்கின்றனர்.
எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வர்கள் அழைக்கப்படுவர். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். கலந்தாய்வின் போதே, விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த பணியின் நியமன ஆணை வழங்கப்படும்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று போட்டி தேர்வர்கள் அமைப்பு தமிழ்நாடு அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு 3 வருடங்கள் கழித்து கடந்த 24 ஜூலை 2022 அன்று முடிந்தது. இந்த பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 15 ஆயிரம் பணியிடங்களுக்கு 7301 பணியிடங்களே வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் பணி ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் 15 ஆயிரம் என்பது மேலும் அதிகமாகியுள்ளதால் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.
அரசு பணியே உயிர் என்று தன் உயிர் மூச்சாக கொரோனா பெருந்தொற்று காலத்தை கடந்தும் இதையே நம்பி காத்துக்கொண்டு இருக்கும் எங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.
கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டது அப்போது கூட பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 2018ல் 11800 ஆகவும் 2019-ல் 9500 ஆகவும் இருந்தது. தற்போது தேர்வின் வினாத்தாள் கடினமாகவும் தவறான சில கேள்விகளும் இடம் பெற்றதால் எல்லை மதிப்பெண் பெற்றவர்கள் கடினமாக படித்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு 7, 031 என்பதை மேலும் 8 ஆயிரம் அதிகரித்து 15, 000 பணியிடங்கள் வெளியிட வேண்டும் என்று போட்டி தேர்வர்கள் பணிவண்புடன் கேட்டுகொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பணியிடங்கள் அதிகரிப்பு
இந்நிலையில் இன்று வெளியுட்டுள்ள அறிவிப்பில் குரூப் 4 பணியிடங்களை 10,117 ஆக உயர்த்தி அறிவிப்பை வெளியுட்டுள்ளது