பள்ளி மாணவர்கள் தேர்வில் எளிதாக அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? Top 10 Tips to get good marks in Exams

Tips to get good marks in Exams

பள்ளி மாணவர்கள் தேர்வில் எளிதாக அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

Tips to get good marks in Exams ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

Tips to get good marks in Exams
Tips to get good marks in Exams

Tips to get good marks in Exams

1.தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

2.ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

3.படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.

4.அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க தூண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.

5.படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.

6.போதிய தூக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.

7.கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.

8.படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

9.தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.

10.உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

11.தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

Tips to get good marks in Exams
Tips to get good marks in Exams

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!