Aadhar card renewal after 10 years details in tamil
Aadhar card renewal after 10 years details in tamil இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம். ஆதார் அட்டை மூலம் பல விஷயங்களை எளிதாக செய்ய முடியும். அதே நேரத்தில் அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்த ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை தொடர்பாக அரசு தரப்பில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மக்கள் பயன்பெற உள்ளனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
ஆதார் அட்டை புதுப்பிப்பு
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016 என்னும் விதியின் கீழ், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ‘அடையாளச் சான்று’ ( POI) மற்றும் ‘முகவரிச் சான்று’ (POA) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஆதாரில் உள்ள விபரங்களை புதுப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் அட்டை மூலமாக நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது.
Aadhar card renewal after 10 years details in tamil
இலவச சேவை
இந்நிலையில், இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் நோக்கில் ‘மக்களை மையமாகக் கொண்ட நடவடிக்கையில்’, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் போர்ட்டலில் தங்களுடைய ஆவண விவரங்களைப் புதுப்பிக்க ஆதார் அட்டை புதுப்பிப்பு கட்டணமான ரூ. 50 கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இலவச சேவை கிடைக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் 315 சலுகைகளையும், மாநில அரசுகளின் 635 சலுகைகள், திட்டங்களைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகியுள்ளது. ஆதலால், அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிப்பது அவசியம். அதாவது ஆதார் அட்டைதாரர்கள் செல்போன் எண்ணை மாற்றியிருந்தாலோ அல்லது முகவரியை மாற்றியிருந்தாலோ அதை புதுப்பிக்கலாம்.
ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் முடிந்தவர்கள், ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள், ஆன்-லைன் மூலமோ அல்லது மை ஆதார் போர்டல் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம். இல்லாவிட்டால் ஆதார் பதிவு மையம் அல்லது பொதுச்சேவை மையத்தில் புதுப்பிக்கலாம். அஞ்சல ஊழியரிடம் ரூ.50 செலுத்தினால் ஆதார் விவரங்கள் வீட்டிற்கே வந்து புதுப்பிக்கப்படும்.
அது மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் அட்டையும் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் அடுத்த சில மாதங்களில் அமலாகும்.
இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எத்தனை பேர் ஆதார் விவரங்களை புதுப்பித்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை.கடந்த ஆண்டு 16 கோடி ஆதார் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டன