aadhar card update status check online tamilnadu
aadhar card update status check online tamilnadu ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் வசிக்கும் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம். இதனை UIDAI இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நிர்வகித்து வருகின்றது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
இந்தியாவில் இந்த திட்டம் 2009 பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. இந்த ஆதாரில் பயனரின் கண்ணின் விழித்திரை, கைரேகை, இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டு அவருக்கு 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும். 12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படாமாட்டாது.

aadhar card update status check online tamilnadu
இந்தியாவில் ஆதார் நடைமுறைக்கு வந்து சுமார் 13ஆண்டுகள் ஆகின்றது. தற்போது கிட்டத்தட்ட அரசின் நலதிட்ட உதவிகளுக்கும் மற்ற ஆவணங்களை இணைப்பதற்க்கும் ஆதார் முக்கியமாகியுள்ளது. இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஆதார் வாங்கியவர்கள் பலர், வேறு முகவரிக்கு மாறி இருக்கலாம் அல்லது ஆதார் உள்ள, பெயர், பிறந்த தேதி, மாதம் ,வருடம், பாலினம், முகவரி, என ஏதாவது விவரங்கள் மாற்றவேண்டி இருக்கலாம், ஆனால் சிலர் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள்
அப்படி இருக்கும் போது மற்ற ஆவணங்களில் உள்ள விவரமும் ஆதார் விவரமும் ஒத்து போகாமல் இருக்கும் , உதாராணமாக உங்கள் வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட், பான் கார்டு , உங்கள் கல்வி சான்றிதழ், ரேசன் கார்டு என அனைத்திலும் ஒரே தகவல்கள் இருப்பது அவசியமாகும் ஆனால் ஆதாரில் உள்ள தகவல்களும் மற்ற ஆவனங்களில் உள்ள தகவல்களும் வேறு மாதிரி இருக்கும் அந்தத் தகவல்களை ஆதாரில் பதிவு செய்யாமல் இருப்பார்கள்.
ஆதாரை ஏதாவது ஒரு அடையாள அட்டையில் இணைக்கும்போதோ, ஏதாவது ஒன்றுக்கு ஆதார் தேவைப்படும்போதோ, மாற்றங்களை பதிவேற்றம் செய்யாததால் பல குழப்பங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் அடையாள அட்டை வாங்கியவர்kஅள் உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் ஆதார் ஆணையம் அறிவுறுத்துகின்றது ஆதாரில் உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், பாலினம், முகவரி போன்ற விவரங்களை நீங்கள் ஆன்லைன் அல்லது உங்கள் அருகில் இருக்கும் இசேவை மையங்களில் நீங்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்

MAnoj Nachakonanpattai SINTHAKUNDU PO DINDIGUL