Aishwarya sheoran success story in tamil
ஐஸ்வர்யா ஷியோரன்
ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன் டெல்லியில் கல்லூரிப்படிப்பை முடித்து, அதன் பிறகு, இந்தூர் ஐ.ஐ.எம்-மில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார். மாடலிங் துறையில் பணிபுரிந்து வந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருக்க, அதனை நிறைவேற்ற, பத்து மாதங்களாகத் தேர்வுக்குத் தயாராகியுள்ளார்.

இந்திய அளவில் 93-வது ரேங்க்
தனிப்பயிற்சி எதுவும் எடுக்காமல் வீட்டிலேயே படித்த அவர், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 93-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு நானும் மிஸ் இந்தியாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினேன். ஆனாலும் சிவில் சர்வீஸ் தேர்வு பாஸாக வேண்டுமென்பது என் கனவு’, அதனை தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானேன். இதற்காக நான் எந்தவித பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. செல்போன், சமூக வலைத்தளங்கள் என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாகப் படித்தேன். எளிதில் வெற்றி பெற்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.