Indian Railways South East Central Recruitment 2023
Indian Railways South East Central Recruitment 2023 தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 548 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் இருக்கும் டிரேட் அப்ரெண்டிஸ் காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேர இளைஞர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த டிரேட் அப்ரெண்டிஸ் (Trade Apprentices) பணி ஐடிஐ படித்த இளைஞர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 548 பணியிடங்களுக்கு டிரேட் அப்ரெண்டிஸ் தேவை என வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பின்னர் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி விவரம்
டிஜிட்டல் போட்டோகிராபர், வெல்டர், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், பிட்டர் (Fitter), காபா (Copa), டிராப்ட்ஸ்மேன் (Draftsman), மெக்கானிக், பிளம்பர், மெசினிஸ்ட், பெயிண்டர், ஷீட் மெட்டல் வொர்க், ஸ்டெனோ, ஸ்டெனோகிராபர், டர்னர் (Turner), வயர்மேன், கேஸ் கட்டர் உள்ளிட்ட பணிகளில் 548 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது விவரம்
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 15 வயது நிரம்பியிருக்க வேண்டும்; அதிகபட்சமாக 24 வயது இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு கொடுக்கப்படும்.