NMBSE Primary Teacher Recruitment 2023
பள்ளிக் கல்விக்கான தேசிய மதர்சா வாரியமானது, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு மதர்சா பள்ளிகளுக்கான தொடக்க ஆசிரியர் (Primary Teachers (PRT)) பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. அரசு ஊதிய அளவு மேட்ரிக்ஸ் நிலை – 6-ன் படி இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் Primary Teacher பதவிக்கு என மொத்தம் 1316 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத கால அடிப்படை ஆசிரியர் பயிற்சிக்கான டிப்ளமோ அல்லது சான்றிதழ், அல்லது Bachelor of Elementary Education (B.El.Ed.) / B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில அல்லது மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள்-I) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 44 க்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PH விண்ணப்பதாரர்களுக்கு 5 வருட தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,400 – 1,12,400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் https://madarsaschools.org/apply-online.aspx என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28.07.2023 முதல் 11.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.