Pink WhatsApp எச்சரிக்கும் காவல் துறை.. முக்கிய தகவல்கள் Pink WhatsApp News in Tamil

Pink WhatsApp News in Tamil

Pink WhatsApp News in Tamil சில நாட்களாக வாட்ஸ்அப் பிங்க் என்ற வார்த்தையை அதிகமாக கேள்விபட்டிருப்போம். உண்மையில் இது ஒரு மோசடி ஆப் ஆகும். இதில் இருந்து பயனர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிங்க் நிறத்திலான இந்த வாட்ஸ்அப் டவுன்லோடு செய்வதன் மூலம் பயனர்கள் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது.

வாட்ஸ்அப் ஃபார்வர்ட் மூலம் இந்த பிங்க் வாட்ஸ்அப்-க்கு லிங்க் அனுப்பபடும். அதில் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வெர்ஷன் வாட்ஸ்அப்பை டவுன்லோடு செய்யுங்கள் என மெசேஜ் கொடுக்கப்பட்டிருக்கும்

இணையுங்கள் எங்களின் தகவல் களஞ்சியம் News Update குழுவில்

Latest Government Jobs 2023 – Click here to apply

மும்பை சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ள அறிவிப்பில், வாட்ஸ்அப்பில் போலியான மெசேஜ் ஒன்று பரவி வருகிறது. அது வாட்ஸ்அப் லோகோவின் நிறத்தை (WhatsApp Logo Colour) மாற்றும் ஒரு அப்டேட்டை வழங்குவதாக கூறுகிறது. கூடுதலாக, வாட்ஸ்அப் அனுபவத்தை மேம்படுத்த உதவும் புதிய அம்சங்களை வழங்குவதாகவும் உறுதியளிக்கிறது.

ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை. அந்த மெசேஜுடன் வரும் இணைப்பானது ஒரு ஃபிஷிங் லிங்க் (Phising Link) ஆகும். அதை நீங்கள் கிளிக் செய்யும் பட்சத்தில், அது உங்கள் ஸ்மார்ட்போனை பாதித்து, உங்களை பற்றிய முக்கியமான தகவல்களை திருடிக்கொளும் அல்லது ஹேக்கர்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோலை கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிங்க் வாட்ஸ்அப் லிங்க்-ஐ கிளிக் செய்தால் என்ன நடக்கும்? உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள மொபைல் எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் திருடப்படலாம்.

நிதி இழப்புகளை கூட சந்திக்கலாம்; உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். ஸ்பேம் அட்டாக்கிற்கு உள்ளாகலாம்; உங்கள் மொபைல் போனானது ஹேக்கர்களால் முழுமையாக கட்டுப்படுத்தப்படலாம்.

Pink WhatsApp News in Tamil
Pink WhatsApp News in Tamil

வாட்ஸ்அப் பிங்க் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இது போன்ற மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க சந்தேகப்படும்படியான லிங்க் மெசேஜ்கள், இ-மெயில் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் பிளே ஸ்டோர் தளங்களில் இருந்து மட்டும் ஆப் டவுன்லோடு செய்யவும். இருப்பினும், ஐபோன் பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அடையாள தெரியாத தளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோடு செய்ய ஆப்பிள் அனுமதிக்காது.

மேலும் வாட்ஸ்அப் ‘ஃபார்வர்டு’ மெசேஜ்களில் வரும் லிங்க்குள், APK ஃபைல்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எப்போதும் போல் அன்இன்ஸ்டால் செய்ய முடியாது

வாட்ஸ்அப் பிங்க் அன்இன்ஸ்டால் செய்ய முதலில் உங்கள் ‘Linked devices’ இணைப்புகளை துண்டிக்கவும். அதில் உள்ள சந்தேகத்திற்கிடமான லிங்குகளை நீக்கவும். ஒரு முறை வாட்ஸ்அப் பிங்க் இன்ஸ்டால் செய்யப்பட்டால், ஆப் உங்கள் போன் “Installed Apps” பக்கத்தில் இருந்து இது மறைக்கப்படும்.

இதைக் கண்டுபிடிக்க உங்கள் போன் செட்டிங்ஸ் பக்கம் சென்று “ஆப்ஸ்” (Apps) பகுதிக்குச் செல்லவும். அங்கு பிங்க் நிற லோகோவுடன் வாட்ஸ்அப் பிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கண்டறிந்து அன்இன்ஸ்டால் செய்யவும். உங்கள் போனில் இருந்து ஆப் முழுமையாக நீக்கப்பட்டதாக என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!