Railway Station Name with PH
Railway Station Name with PH சில ரயில் நிலையங்களில் பின்புறத்தில் PH என்று ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்…….
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
ரயில், ரயில்நிலையங்கள், அதன் பெயர் பலகைகள் என ரயில்வே துறையின் அனைத்திலுமே பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட நமக்குத் தெரியாத ஒரு சுவாரஸ்யத்தைப் பற்றித் தான் நாம் பார்க்கப்போகிறோம்…..
ரயிலில் பயணம் என்பதே சுவாரஸ்யமானது தான். பயணத்தின் நடுவில் அழகான இயற்கைக்காட்சி, முகம் தெரியாதவர்களின் நட்பு, என ரயில் பயணத்தின் ஆனந்த அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் மத்தியில், ரயில்வே தொடர்பான பல தனித்துவமான விஷயங்கள் நிறைந்துள்ளன. அதைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதில் ஒன்று தான் ரயில் நிலைய பெயர் பலககைள் சொல்லும் விநோதம்….
நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம், வழியில் பல நிலையங்கள் இருக்கும். அந்த நிலையங்களில் ஏதேனும் ஒன்றின் பெயருக்குப் பின்னால் PH என எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தீர்களா? அதற்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இப்போது பார்க்கலாம்.
Railway Station Name with PH
சில ரயில் நிலைய பெயருக்கு முன்னால் PH என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். இப்போது தெரிந்து கொள்ளுங்கள்….
- PH என்பதன் முழுமையான ‘பாசஞ்சர் ஹால்ட்’ என்பதே. அதாவது பயணிகள் ரயில்கள் அந்த நிலையத்தில் நிற்கும். இவை பொதுவாக கிராமப் பகுதிகளில் இருக்கும் மிகச் சிறிய நிலையங்கள் ஆகும்.
- இங்கு பயணிகள் ரயில்கள் மட்டுமே நிற்கும். மற்ற ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் இந்த ரயில் நிலையங்களில் இருக்காது. இங்கு ஸ்டேஷன் மாஸ்டர் அல்லது வேறு எந்த அதிகாரியும் ரயில்வேயால் நியமிக்கப்படுவதில்லை. இவை டி வகுப்பு நிலையங்கள்….
- இது போன்ற நிலையங்களில் ரயிலை நிறுத்துவதற்கு சிக்னல் இல்லை என்பது இன்னும் ஆச்சரியம். PH என எழுதப்பட்ட நிலையங்களில் ரயில் 2 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்படும். இந்த நிலையங்களில் டிக்கெட் விநியோகிக்க ரயில்வே ஊழியர் இருக்க மாட்டார்.
- டிக்கெட்டுகளை வாங்க மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் நியமிக்கப்படுகிறார். அவர்களுக்கு ரயில்வே கொஞ்சம் கமிஷன் கொடுத்து பயணிகளுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது ரயில்வே நிர்வாகம்….
- இதுபோன்ற நிலையங்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்பதால் இது போன்ற சிறப்பு அம்சங்களுடன் சின்ன சின்ன ரயில் நிலையங்களையும் ரயில்வே அமைச்சகம் பராமரிக்கிறது. இந்த ரயில் நிலையங்களால் பெரிய அளவில் வருமானம் இருக்காது.
- ஆனாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இது போன்ற ரயில் நிலையங்கள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
- பொதுமக்களும் இந்த ரயில் நிலையங்களை தங்கள் வசதிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்….