Tamilnadu Co-operative Sugar Mill Recruitment 2023
Tamilnadu Co-operative Sugar Mill Recruitment 2023 கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Lab Chemist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27-03-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எங்கு அமைந்துள்ளது?
கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்தில் மூங்கில்துறைப்பட்டு (Moongilthuraipattu)சங்கராபுரம் தாலுகாவில், அமைந்துள்ளது. இது தென்பெண்ணை கரையில் (தென்பெண்ணை ஆறு) மீது அமைந்துள்ளது. இவ்வூர் மாநில நெடுஞ்சாலை SH-6 இணைக்கும் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு சர்க்கரை ஆலை உள்ளது. அது தமிழ்நாடு சர்க்கரை கழகம் லிமிடெட் மூலம் நிறுவப்பட்டது. சர்க்கரை மற்றும் கரும்பு சார்ந்த விவசாயம் இக்கிராமத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

Tamilnadu Co-operative Sugar Mill Recruitment 2023
காலிப்பணியிடங்கள்:
Lab Chemist பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பி.எஸ்சி வேதியியல் முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Lab Chemist – ரூ.7,400 – 13,100/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 27-03-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.