TN Schools Rain Leave
மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!?
TN Schools Rain Leave தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புபுள்ளதாக கூறியுள்ளது.
அதேபோல இன்று (19-ம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20 -ம் தேதி முதல் 22-ம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், இப்பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இன்று (19.06.2023) பள்ளிகளுக்கு விடுமுறை
இன்னும் சற்று நேரத்தில் மழையின் தாக்கம் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானதும் இந்த வலைத்தள பக்கத்தில் உடனடியாக Update செய்யப்படும் எனவே இந்த பக்கத்தை Refresh செய்து பாருங்கள்
19.06.2023 விடுமுறை அளிக்கப்படுள்ள மாவட்டங்கள்
- சென்னை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- ராணிப்பேட்டை
- வேலூர்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Click here | |
Telegram | Click here |