TN Schools Rain Leave Info July 2023
TN Schools Rain Leave Info July 2023 தமிழகத்தில் ஜூலை 2 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மழை பெய்யக்கூடும்..
02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த ஒரு வார காலமாகவே மலை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வருகிற ஜூலை 3 ஆம் தேதி(திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் இந்த அறிவிப்பால், மாணவர்கள் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்று எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இதுதொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு
பள்ளி மாணவர்கள் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பொது முன் ஏற்பாடு உடன் செல்ல வேண்டும். மேலும் மழை பொழிவின் அளவை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் ஆவலில் உள்ளனர்
OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு |
|
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் |
|
WhatsApp Group |
Click here |
Ranipet district leave ah