இந்தியாவில் உள்ள மாவட்ட தாலுகா அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆட்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வேலைவாய்ப்பு
நாடு முழுவதும் உள்ள மாவட்ட தாலுகா அலுவலகங்களில் சுமார் 13,000 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. வழக்கமாக இத்தகைய பணியிடங்களுக்கு ஆட்கள் நேர்முகத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் பணி நியமனம் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுள்ளவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இத்தகைய பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்வித்தகுதியை உடையவர்கள் ஆன்லைன் வாயிலாக எளிதாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 30,000 வழங்கப்படும்.
விண்ணப்ப செயல்முறைகள் பின்வருமாறு.

விண்ணப்பிக்கும் முறைகள்:
- முதலில் https://nyks.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளபக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உங்களது மாநிலம் மற்றும் மாவட்டத்தை தேர்வு செய்து உள் நுழையவும்.
- அதனை தொடர்ந்து வரும் பக்கத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தில் கல்வித்தகுதி, முகவரி, வயது, வேலை அனுபவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் .
- இறுதியாக விவரங்களை சரிபார்த்து ‘SUBMIT’ கொடுக்கவும். பிறகு உங்களது இ – மெயில் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.