TNPSC Group 4 2023 Notification
டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றத் தேவைப்படும் ஊழியர்கள் முதல் உயர் அலுவலர்கள் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப, போட்டித் தேர்வுகள், நேர்காணல் ஆகியவற்றை நடத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசுப் பணிகளுக்கு ஆட்சேர்ப்பை நடத்துகிறது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
லட்சக்கணக்கில்
ஒவ்வோர் ஆண்டும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு வைத்து பணியாளர்களை நியமித்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதி வருகிறார்கள். சில நூறு காலியான இடங்களுக்கு லட்சக்கணக்கில் தேர்வர்கள் தேர்வு எழுதி, அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விரைவில் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் பற்றிய விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள், போட்டித் தேர்வுகளின் உத்தேச தேதி குறித்த திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின்படி எந்த தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ளலாம்.
TNPSC குரூப் 4 தேர்வு எப்போது?
2023ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொடர்பான அறிவிப்பாணை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் உள்ளது என்பதற்கான விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போதும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அது சார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது?
- ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
- பில் கலெக்டர்.
- தட்டச்சு செய்பவர்.
- ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).
- கள ஆய்வாளர்
- வரைவாளர்
குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) மேலே குறிப்பிட்டுள்ள 6 அரசு துறை பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 29 PSC தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வின் நேரம் மற்றும் தேர்வுக்கான தேதி மாநிலங்களுக்கு ஏற்றார் போல மாறுபடும்.
இந்தியாவில் முக்கியமாக 2 வகையான PSC தேர்வு நடத்தப்படுகிறது. ஒன்று UPSC, அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய அளவில் நடத்தப்படும் மத்திய அரசு தேர்வு. மற்றொன்று, PSC – அதாவது பொது சேவை ஆணையம் தேர்வு ஆகும்.
டிஎன்பிஎஸ்சி என்பது தமிழக அரசுப் பணிக்குத் (TNPSC Group IV) தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். அரசுப்பணியாளர் தேர்வாணையம் (PSC – Public Service Commission) இந்திய அரசால் 1929 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தந்த மாநிலத்தின் பொது சேவையில் பணியாளர்களை சேர்ப்பதற்கான பொறுப்பு அந்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
TNPSC-க்கு நான்கு தொடர்ச்சியான தேர்வுகள் உள்ளன. அவை குழு 1, குழு 2, குழு 3 மற்றும் குழு 4. இதை தவிர குழு 5,6,7,8 தேர்வுகளும் நடத்தப்படுகிறது. அவை நேர்காணல் இடுகை மற்றும் நேர்காணல் அல்லாத பணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக கூறினால் குரூப் 2 மற்றும் 2A ஆகும்.