TNPSC Group 4 Question Paper Leak
TNPSC Group 4 Question Paper Leak கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் 7 மாதங்கள் காலதாமதத்திற்கு பின்னர் நேற்று வெளியிடப்பட்டன. 18 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வு எழுதி இருந்தனர். முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்களில் சில குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.
குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 2,000 தேர்வர்கள் தேர்ச்சி என தகவல் வெளியாகியுள்ளன. அந்த, குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பயின்ற விருத்தாச்சலம் மாணவர் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குரூப் -4 தேர்வில் முதல் 11 இடங்களில் ஆறு இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNPSC Group 4 Question Paper Leak
தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கின்ற தனியார் நிறுவனம் தமிழகம் முழுவதும் 40க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருகின்றது. இதில் பயின்ற மாணவர்கள் 2,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறிப்பிட்ட ஒரு தேர்வு மையத்திலிருந்து அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம் பரவலாக தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப்-4 தேர்வு திடீர் திருப்பம்.
- டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு புகாரில் திடீர் திருப்பம்.
- கருவூல அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள்களை முன்கூட்டியே லீக் செய்ததாக தகவல்.
- மயிலாடுதுறையைச் சேர்ந்த பல இளைஞர்கள் தென்காசியில் தேர்வு எழுதியதும் அம்பலம்.
- டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் கருவூலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
- கருவூலகங்களுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பப்படும் நிலையில், கருவூலக அதிகாரிகள் துணையோடு முறைகேடு நடந்திருக்கலாம் என தகவல்.