11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 11th Result 2023 Tamilnadu

11th Result 2023 Tamilnadu

11th Result 2023 Tamilnadu தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளி மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாக உள்ளன. இதை அரசு இணையதளங்கள், குறுஞ்செய்தி, பள்ளிகள், ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் என 5 வழிகளில் தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு மே 19ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 3,260 தேர்வு மையங்களில் எழுதினர்.

11th Result 2023 Tamilnadu
11th Result 2023 Tamilnadu

தேர்வு நடந்தது எப்போது?

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. மார்ச் 16ஆம் தேதி ஆங்கிலப் பாடம், மார்ச் 20ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், ஆகிய பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

மார்ச் 24ஆம் தேதி அன்று உயிரியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கும் மார்ச் 28ஆம் தேதி அன்று வேதியியல், கணக்குப் பதிவியல், மார்ச் 30ஆம் தேதி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. கடைசியாக ஏப்ரல் 05ஆம் தேதி அன்று கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற்று முடிந்தது.

மேலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றன. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ் (மொழித்தாள்) பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 10 ஆங்கிலம், ஏப்ரல் 13- கணிதம், ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள் மற்றும் ஏப்ரல் 17- அறிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து இவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – Click here to apply

மே 19ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள்

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, மே 19ஆம் தேதி (இன்று) மதியம் 2 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோன்று, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவு மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது.

5 வழிகளில் தேர்வு முடிவுகள்

மாணவர்கள், www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in , www.tnresults.nic.in  ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதற்குத் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர்கள் உள்ளிட வேண்டியது அவசியமாகும்.

மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பிற வழிகள்

மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களில் (National Informatics Centres)  தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

இவை அனைத்தையும் தவிர்த்து, அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், 10 மற்றும் 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  • Go to the official website: tnresults.nic.in
  • Tap on the link of ‘SSLC Exam – March 2023 Results’
  • A login window will show up on the screen
  • Fill in your registration number and date-of-birth
  • Your result will show up on the screen
  • Cross check and download the result
  • Print a hardcopy of the same and keep it saved for future references

11th Result 2023 Tamilnadu Link

Result Link 1 – Click here

Result Link 2 – Click here

Result Link 3 – Click here

Result Link 4 – Click here

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – Click here to apply

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: Content is protected !!