கொரோனா பரவல் நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கியது அதன் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 2020 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, பின்னர் ஆகஸ்ட் 2020 முதல் தளர்வுகளை அறிவித்தது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள். அதன்பிறகு நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடைபெற்றது.
கடந்த 3 செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தற்பொழுது U.G.C அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த சுற்றறிக்கையில் இனி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டாம், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த சுற்றறிக்கையை அனைத்து மாநில கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.