TNPSC Group 4 Certificate Upload
அரசு வேலை பெற வேண்டும் என்பதை கனவாக கொண்டவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது குரூப் 4 தேர்வாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 10,117 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏராளமானோர் இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |
தகவல் களஞ்சியம் | |
WhatsApp Group | Click here |
Latest Government Jobs 2023 - Click here to apply
‘குரூப் – 4’ தேர்வு முடிவுகள், மார்ச் 24ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு, 2.5 பேர் என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான பட்டியலை, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இதில், 25 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர்.
பட்டியலில் பதிவெண் உள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, ‘ஸ்கேன்’ செய்து, ‘இ – சேவை’ மையம் வழியாக, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், வரும் 13ம் தேதி முதல் மே 5ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.